பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2014

தேமுதிக எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்தை அதிமுக தலைமை கைவிட்டுருப்பதால் தேமுதிகவினர் நிம்மதி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு பின் தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காகவே, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகளை, அதிமுக தங்கள் பக்கம் கவர தொடங்கியது.
இதன் விளைவாக தேமுதிகவின் எட்டு எம்.எல்.ஏ.,க்கள் அதிமுக பக்கம் சாய்ந்ததால் தேமுதிக தலைமை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலிலும் தேமுதிக தோல்வியை தழுவியதால் கட்சியில் இருக்கும் பலர் ஆளும்கட்சிப் பக்கம் செல்ல நேரம் பார்த்துள்ளனர்.
இதையறிந்த தேமுதிக தலைமை மீண்டும் கவலை அடைந்ததோடு அதை தடுத்து நிறுத்தவும் முயன்றுள்ளனர்.
இந்நிலையில், தேமுதிகவில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் யாரையும் இழுக்க வேண்டாம் என அ.தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியதால் தேமுதிக தலைமை நிம்மதி அடைந்துள்ளதாக தெரிகிறது.