மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிகழ்ச்சிக்காக வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரிப் பாசனப் பகுதி, டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவின் பேரில் மேட்டூர் அணையில் முன்கூட்டியே நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 ஆக உயர்த்த முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளால் தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வரும் 22ம் திகதி, மதுரையில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை விவசாயிகள் சிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். |