பக்கங்கள்

பக்கங்கள்

12 ஆக., 2014

ஊடகவியலாளரின் கன்னத்தில் அறைந்த மரடோனா
முன்னாள் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் தியாகோ மரடோனா ஊடகவியலாளர் ஒருவரை கன்னத்தில் அரைந்த சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
 
மரடோனா தனது குடும்பத்துடன் சிறுவர் தின நிகழ்வில் பங்குபற்றிவிட்டு திரும்பும் வழியில் ஊடகவியலாளர் ஒருவர் மரடோனாவின் முன்னாள் மனைவி வெரோனிகா ஒஜேடாவை பார்த்து கண்ணடித்ததாக குறிப்பிடப்படுகிறது. 
 
இதனால் கோபமடைந்த மரடோனா ஊடகவியலாளரை கன்னத்தில் அறைநததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
 
மரடோனா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல, 1986ஆம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டியின் போது இடது கரத்தால் கோல் போட்டு சர்ச்சையை தோற்றுவித்தார்.
 
இதேவேளை 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது ஊக்க மருந்து சோதனையில் சிக்கி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.