பக்கங்கள்

பக்கங்கள்

2 ஆக., 2014

காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் தொடரும் பதக்க வேட்டை
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இதுவரை 13 தங்கம், 23 வெள்ளி, 15 வெண்கலப்பதக்கங்கள் என்று 51 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.
மேலும், 140 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 124 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இன்றைய குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபெறும் 4 வீரர்கள் கண்டிப்பாக பதக்கத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டேபிள் டென்னிஸ் வீரர்களான அச்சந்தா சரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.
நட்சத்திர குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், அயர்லாந்து வீரரான கோனர் கோய்லேயை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
அதேபோல் மான்தீப் ஜங்கரா, லைசாராம் தேவேந்த்ர சிங், சரிதா தேவி ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு சென்ற நிலையில், இன்றைய குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை தட்டிச்செல்வார்கள் என்று தெரிகிறது. மகளிர் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை பிங்கி ராணி வெண்கலமே பெற்றார்.