பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2014

13வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியம்!- இந்தியா
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பருதீன் இந்த கருத்தை புதுடில்லியில் நேற்று வெளியிட்டுள்ளார்.
13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஏற்கனவே உறுதியளித்தது. அது தொடர்பில் மீண்டும் உறுதிமொழியை வழங்கியுள்ளது.
எனவே இலங்கை எந்த தீர்மானத்தை எடுத்தாலும் 13வது திருத்தம் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று அக்பருதீன் குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ் 13வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதனை முழுமையாக உறுதிப்படுத்த இலங்கை உறுதியளித்துள்ளதாக அக்பருதீன் தெரிவித்துள்ளார்