பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2014

எனது பிறந்த நாளை, கொண்டாட வேண்டாம்: காஷ்மீர் மக்களுக்கு உதவ நரேந்திர மோடி வேண்டுகோள்


வரும் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 64வது பிறந்த நாள் வருகிறது. அன்று மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எனது நண்பர்களும், நலம் விரும்பிகளும், எனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடுவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவதாக அறிகிறேன். அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள். எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். 

அதற்கு பதில், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் உதவ வேண்டும். இதற்காக உங்களது நேரத்தையும் உழைப்பையும் தர வேண்டும். தற்போது காஷ்மீரில் உள்ள நமது சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கு நாம் தோளோடு தோள் நிற்க வேண்டிய நேரம். வரும் 17ம் தேதி குஜராத் வந்தாலும், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இருக்காது. 17ம் தேதியன்று சீன அதிபர் ஷி ஜிங்பிங் குஜராத் வருகிறார். அவரை உற்சாகத்துடன் வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதும் இருக்காது என கூறினார்