பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2014

பிராட்மேனை முந்தினார் சந்தர்பால்: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவு
வங்கதேசம் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு
அணி தொடரை 2-0 என்று கைப்பற்றியது. சந்தர்பால் 30வது சதம் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை முந்தியுள்ளார்.

செயின்ட் லூசியாவில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 219 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி 4வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 4 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

தனது 30வது டெஸ்ட் சதத்தை எட்டிய 40 வயதான சந்தர்பால் 101 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் 29 சத சாதனையை முந்திய சந்தர்பால், ஒட்டுமொத்தமாக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் மேத்யூ ஹைடனுடன் 10வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் 489 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி விக்கெட் சீட்டு கட்டுபோல் சரிந்தது. முடிவில் அந்த 192 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் மேற்கிந்திய தீவு அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தமீம் இக்பால் 64 ரன்னும், ஹக்கீவ் 56 ரன்னும், ரஹ்மான் 39 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். மேற்கிந்திய தீவு அணி வீரர் பென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.