பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2014



கத்தி கண்டிப்பாக தீபாவளிக்கு வரும்! - படத்தை தயாரிக்க 2 நாள் வருமானமே போதும் லைகா


கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை  லைகா நிறுவனம்
சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார் என்பது தான்.
ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த அவர் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இதில் பேசிய இவர் ‘‘கத்தி படத்தை ராஜபக்ஷே தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் கத்தி படத்தின் பட்ஜெட்டிற்கு என் 2 நாள் வருமானமே போதும்.
சில இயக்கங்கள் தங்களின் சொந்த பப்ளிசிட்டிக்காக ‘கத்தி’ படத்திற்கு தேவையில்லாத எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
‘கத்தி’ படம் யாருக்கும் கைமாற்றிக் கொடுக்கப்போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
வரும் 18ஆம் தேதி இசை வெளியீட்டையும், திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கும் ரிலீஸ் செய்வோம்.
இதனால் பிரச்சனைகள் ஏதாவது எழுந்தால், அதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். ’ என்று தெரிவித்துள்ளனர்.