பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2014


கொலை குற்றச்சாட்டு தப்பினார் பிஸ்டோரியஸ்

காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸ் (27) கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர் பிஸ்டோரியஸ். விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இவர், செயற்கை கால்களுடன் ஒலிம்பிக் உள்பட சர்வதேச தடகள
போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, ஜோகன்னஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் காதலியும் பிரபல மாடல் அழகியுமான ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், பிஸ்டோரியஸ் மீதான கொலை குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி மசிபா, கொலை குற்றச்சாட்டில் இருந்து பிஸ்டோரியசை நேற்று விடுவித்தார். இதனால், அதிகபட்ச தண்டனையான 25 ஆண்டு சிறைவாசத்தில் இருந்து பிஸ்டோரியஸ் தப்பியுள்ளார். எனினும், கொலை நோக்கமில்லாமல் மரணத்துக்கு காரணமாக இருந்ததற்காக, அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.