பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2014


ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி 27-க்கு மாற்றம்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களை
தாண்டிய இந்த வழக்கில் வரும் 20-ந்தேதி கோர்ட் தீர்ப்பு வழங்க இருந்தது. இதனால், 20-ந்தேதி ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேற்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது ஆகவே, சிறப்பு நீதிமன்றத்தை பரப்பனஅக்ராஹாரத்திற்கு மாற்றம் வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு நாளை விசாரணை நடைபெறும் என்று கூறினார்.

அதன்படி இன்று காலை நீதிபதி வழக்கின் தீர்ப்பு பரப்பனஅக்ராஹாரத்தில் மாற்றப்படும் என்று அறிவித்தார். மேலும், நீதிமன்றம் மாற்றப்படுவதால் தீர்ப்பு தேதி 27-க்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தயாராக இருக்கிறது என்றார்.

பரப்பனஅக்ராஹார நீதிமன்றத்தில்தான் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.