பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2014

தேரேறி வருகிறாள் தெல்லிப்பழை துர்க்கையம்மன் 
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

 
துர்க்கை அம்மனின் பெருந்திருவிழா கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 9 தினங்களும் வெகு விமர்சையாக திருவிழாக்கள் இடம்பெற்றுவந்தன. 
 
வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்து வருகைதந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் சூழ்ந்திருக்க பத்தாவது நாளான இன்று துர்க்கையம்மன் தேரேறி அருள்பாலித்து வருகின்றார்.
 
தேர்த்திருவிழாவில் அம்மனின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், கற்பூரச் சட்டி எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவருகின்றனர்.