பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2014


பாலியல் புகார்: நித்திக்கு ஆண்மை பரிசோதனை: ஆண் குரலா? பெண் குரலா என்பது குறித்தும் சோதனை

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்தனர். இதனை எதிர்த்து நித்யானந்தா பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் ஆகஸ்டு மாதம் 6ந் தேதி ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த சோதனைக்கு தடை கோரி நித்தியானந்தா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நித்யானந்தா கோரிக்கையை நிராகரித்தது. பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த சீடர்களுடன் நித்தியானந்தா திங்கள்கிழமை காலை 8 மணிக்கு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

நித்யானந்தா காவி உடை அணிந்திருந்தார். அவருடன் வந்த பெண் சீடர்கள் வெள்ளை சேலையும், ஆண் சீடர்கள் காவி உடையும் அணிந்து இருந்தனர். 

ஆஸ்பத்திரியில் அவருக்கு 4 டாக்டர்கள் குழு மருத்துவ சோதனை நடத்தியது. பொது மருத்துவர், நியூராலஜி, உளவியல், தடயவியல் துறை நிபுணர்கள் நடத்திய இந்த மருத்துவ சோதனையை மருத்துவமனை தலைவர் தீர்க்கண்ணா மேற்பார்வையிட்டார்.

ஆண்மை சோதனை முடிந்ததும் மபுவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு நித்யானந்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குரல் சோதனை நடந்தது. நித்யானந்தாவுக்கு ஆண் குரலா? பெண் குரலா என்பது கண்டறியப்பட்டது.