பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2014

அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்று இந்தியாவிலும் நடத்த முயற்சி!- இலங்கையரின் உளவின் மூலம் அம்பலம்
அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கையரின் உளவுத்தகவலின் அடிப்படையில், இந்திய தேசிய புலனாய்வு சேவையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
அருண் செல்வராஜா என்ற இலங்கையர் பாகிஸ்தானுக்காக தென்னிந்தியாவில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது அவர் பாகிஸ்தானியர் ஒருவருக்கு ஸ்கைப் மூலம் தென்னிந்தியாவை பற்றிய உளவுத்தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்ததாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த இலங்கையர் காணொளி வடிவிலான தகவல்களை பரிமாறியமை காரணமாக, தென்னிந்தியாவில் பாகிஸ்தானிய உளவுப்பிரிவினர் 26.11 இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு ஒப்பான தாக்குதல் ஒன்றை திட்டமிட்டிருக்கலாம் என்று இந்திய புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
எனினும் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.