பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2014


கோத்தபாயவின் கோரிக்கையை பரிசீலிக்கும் கூட்டமைப்பு
கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது அழைப்பு கட்சித் தலைமையின் கலந்தாலோசனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஊடாக தூது அனுப்பியிருந்தார்.
கொழும்பு அரசுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான கருத்தியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரச தரப்பின் சார்பில் தாம் பேசுவதற்கு தயார் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
இச் சந்திப்புக்காக கோத்தபாய யாழிற்கு வரவும் தயாராக உள்ளதாக மனோகணேசன் தெரிவித்திருந்தார்.