பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2014

பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மறைக்கப்படுகின்றன: பிரிட்டோ
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைக
ள், துன்புறுத்தல் சம்பவங்கள் மறைக்கப்படுவதாக வாழ்வதற்கான உரிமை என்ற மனித உரிமை அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு முதல் இதுவரையில் பொலிஸாருக்கு எதிராக நான்கு சித்திரவதை சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் பொலிஸார் சித்திரவதைகள் மேற்கொண்டதாக முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
1994ம் ஆண்டு 22ம் இலக்க சட்டத்திற்கு அமைய பொலிஸார் மேற்கொள்ளும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.
சித்திரவதைச் சம்பவங்களுக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய அமைப்புக்கள் இருக்கின்ற போதிலும், அவை தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.