பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2014

சீன உற்பத்திப் பொருட்களால் நிரம்பி வழியும் இலங்கை வர்த்தக நிலையங்கள்: கலாநிதி கருணாரத்ன
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கும் சீன வித்தியார்த்த பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன வித்தியார்த்த பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் உப வேந்தர் பேராசிரியர் வ. யூவலின் ( WaVueliang) மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் உபவேந்தர் கலாநிதி என்.எல்.ஏ. கருணாரத்ன ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
மக்கள் தொடர்பாடல் மற்றும் கூடத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு இக் கைச்சாத்திடும் நிகழ்வு இடம் பெற்றது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி என்.எல்.ஏ. கருணாரத்ன இங்கு உரை நிகழ்த்துகையில்,
சீன ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்துள்ள இன்றைய தினத்தில் இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடம் என்றும் இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் வர்ணித்தார்.
இலங்கையின் வர்த்தக நிலையங்கள் சீன உற்பத்தி பொருட்களால் நிரம்பி வழிவதாகவும் கடைகளுக்குச் சென்றால் நேரிலேயே இதனை கண்கூடாக காணலாம் என்றும் இலங்கை பட்டப்படிப்புக்கு உதவ சீன உதவ முன்வந்தமை குறித்து சீனாவுக்கு தமது நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச பல்கலைக்கழக திட்ட பணிப்பாளர் பேராசிரியர் ரணில் டி சில்வாவும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.