பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2014


வெற்றுக் கோ'சங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்தவை பல

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்டுவதையே நாம் விரும்புகிறோம்

விட்டுக் கொடுப்புடன் செயற்படுவோம் என்கிறார் சம்பந்தன்
கடந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காணக்
கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. முஸ்லிம் மக்களையும் எமது தாயகப் பிரதேசத்திலுள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இறுதித் தீர்வுக்கான ஆக்கபூர்வமான நடவடிக் கையை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி யின் 15ஆவது தேசிய மாநாடு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களையே சிந்திக்துக் கொண்டிருக்காது விட்ட தவறுகளைத் திருத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அரசுடன் விட்டுக்கொடுக்க வேண்டிய இடங்களில் விட்டுக்கொடுத்தும் விட்டுக்கொடுக்கக் கூடாத இடங்களில் விட்டுக்கொடுக்காமலும் நாம் செயற்பட வேண்டும்.
இந்தியப் பயணம் எங்களுக்கு நல்ல திருப்தியைத் தந்திருக்கிறது. இந்த பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மோடி எமக்கு ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கினார். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்டுவதையே நாம் விரும்புகிறோம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர், இந்தியா அதற்கு ஆதரவாக எப்போதும் இருக்கும்.