பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2014


பொட்டு அம்மானை இராணுவம் பிடிக்கவில்லை
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர்
பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை உண்மை இல்லை என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார். இறுதிப்போரின் போது இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட பொட்டு அம்மான், தற்போது ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. இது நிதிச்சேகரிப்புக்காக விடுதலைப்புலிகளின் அனுதாபிகளால் பரப்பப்பட்ட செய்தியாகும் 2009 ஆம் இறுதிப்போரில் பொட்டு அம்மான் கடும் காயங்களுக்கு உள்ளானமையை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தகவல்படி, இராணுவம் உறுதி செய்துள்ளது. எனினும் இறந்து விட்டதாக கூறப்படும் அவரின் உடலை தாம் கண்டுபிடிக்கவில்லை என அவர் குறிப்பிடுள்ளார்.