பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2014

போதிராஜ மாவத்தையில் பதற்ற நிலைமை
கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை பகுதியில் பதற்ற நிலைமை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபாதை வியாபாரிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இந்த பதற்ற நிலைமை நிலவி வருகின்றது.
அண்மையில் குணசிங்கபுரத்தில் கடைகள் உடைக்கப்பட்டு புதிய கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டன.
இந்தப் பகுதியில் கடைகள் வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என நடைபாதை வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடைகள் வழங்குவதாகத் தெரிவித்து புறக்கோட்டையில் காணப்பட்ட கடைகள் உடைக்கப்பட்டதாகவும் இதுவரையில் கடைகள் வழங்கப்படவில்லை எனவும் நடைபாதை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.