பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2014


ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமையும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமையும் என்று அம்மாநில சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை அறிவித்தார்.

அவர் பேசுகையில், மத்திய அரசு அமைத்த சிவராமகிருஷ்ண குழுவிடம், விஜயவாடா பகுதியில் தலைநகர் அமைய வேண்டும் என பெரும்பாலான மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், மாநிலத்தின் மையப்பகுதியில் தலைநகரை அமைப்பதே சரியானதாக இருக்கும் என்றார்.

மேலும், கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஆந்திராவிற்கான புதிய தலைநகரம், மாநிலத்தினி மத்தியப் பகுதியில் விஜயவாடா அருகே அமைய உள்ளது. இதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் மெகா சிட்டிகள் மற்றும் சிமார்ட் சிட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றை கேபினட் சிறப்பு குழு கண்காணிக்கும் என்றார்.