பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2014

வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் -முதல்வர் 
முதல்வருக்கு அதிகாரங்கள் இல்லை!- இராணுவ பேச்சாளர்
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்தை இராணுவம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய, தேசிய பாதுகாப்பு விடயத்தில் மத்திய அரசாங்கமே முடிவுகளை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் உள்ளுர் அரசாங்கங்களுக்கோ, மாகாண அரசாங்கங்களுக்கோ அதிகாரம் இல்லை என்று வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் மத்திய அரசாங்கங்களே முடிவுகளை எடுக்கின்றன.
இதேவேளை இலங்கை படையினரும், பொலிஸாரும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கீழேயே செயற்படுவதாக ருவான் வணிகசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.ளர் ருவான் வணிகசூரிய, தேசிய பாதுகாப்பு விடயத்தில் மத்திய அரசாங்கமே முடிவுகளை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் உள்ளுர் அரசாங்கங்களுக்கோ, மாகாண அரசாங்கங்களுக்கோ அதிகாரம் இல்லை என்று வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் மத்திய அரசாங்கங்களே முடிவுகளை எடுக்கின்றன.
இதேவேளை இலங்கை படையினரும், பொலிஸாரும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கீழேயே செயற்படுவதாக ருவான் வணிகசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.