பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2014


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள 2வது பிரித்தானிய பிணைக்கைதியின் தலையை துண்டிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பிரித்தானியாவை சேர்ந்த
டேவின் ஹெய்ன்சை என்ற நபரின் தலை துண்டித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு எதிராக போர் புரிபவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் தொடர்ந்து பிற நாடுகளுடன் செயல்பட்டால், மற்றொரு பிணைக்கைதியான ஹென்னிங் என்பவரின் தலை துண்டித்து கொலை செய்வோம் என ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் ஜான் என்ற தீவிரவாத காணொளி ஒன்றில் மிரட்டல் விடுத்துள்ளான். ஹென்னிங் பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள எக்லெசில் இருந்து வந்த முன்னாள் டாக்சி ஓட்டுநர் என கூறப்படுகிறது. இவர் கடந்தாண்டு சமூக பணியில் ஈடுபடுவதற்காக துருக்கியில் இருந்து சிரியா எல்லைக்குள் வந்தபோது கடத்தப்பட்டுள்ளார்.