பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2014

போட்டியின்றி தேர்வானதாக வெற்றி கொண்டாட்டம்
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் 

   புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. அதற்காண இடைத் தேர்தல் 18 ந் தேதி நடக்கும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளராக ராஜசேகர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

டே்பு மனு கடைசி நாளில் சி.பி.ஐ, பா.ஜ.க மற்றும் சுவேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது நகராட்சி அலுவலக படிகளில் வரிசையயாக நின்ற 300 அ.தி.மு.கவினர் மற்றவர்கள வேட்பு மனு தாக்கல் செயவதை தடுத்தனர். அதனால் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

   இதனால் கம்யயூனிஸ்ட் கட்சிகள் , பா.ஜ.க வினர் சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வேட்பு மனு வாபஸ் நேரத்தில் அ.தி.மு.க மாற்று வேட்பாளரும் வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க வேட்பாளர் ராஜசேகர் போட்டியின்றி வெற்றி  பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அ.தி.மு.கவினர் பட்டாசுச வெடித்து கொண்டாடினா ர்கள்.