பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2014

இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : 
சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட் கண்டனம்


 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த வழக்கில், அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங்கை கூடுதல் சாட்சியாக அழைத்து விசாரிப்பது தொடர்பாக நேற்று வாதம் நடந்தது. இன்னும் கூடுதலான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ. அனுமதியும் கேட்டது.

அப்போது நீதிபதி சைனி, சி.பி.ஐ. வக்கீலை நோக்கி, ஏற்கனவே ஒரு டஜன் தடவைக்கு மேல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. நிறைய வாய்ப்புகள் தந்தும் இன்னும் ஏன் ஆவணங்களை உங்கள் பிடியில் வைத்திருக்கிறீர்கள்? 

ஒவ்வொரு முறையும் நான் தாராளமாக நடந்துகொள்கிறேன். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தும், உங்கள் கோரிக்கைகளை அனுமதிக்கிறேன். இது ஒரு பெரிய வழக்கு, தயவு செய்து அனுமதியுங்கள் என்கிறீர்கள். ஆனால் பெரிய வழக்கு என்ற பெயரில் நீங்கள் யாரையும் கொல்ல முடியாது என கூறி கண்டனம் தெரிவித்தார்.

இதே நிலைமை நீடித்தால், இந்த வழக்கு முடிவில்லாமல் நீளும். நீதித்துறையின் மீது யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் என நீதிபதி சைனி வேதனையுடன் கூறினார்.