பக்கங்கள்

பக்கங்கள்

14 செப்., 2014

குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் சிலாபம் பொலிஸார் கைது

சட்டரீதியான தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரை சி
லாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த யுவதி வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருந்த இரண்டு குழந்தைகளை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகளை விற்பனை செய்யும் இந்த நடவடிக்கையுடன் வைத்தியசாலைகளில் பணி புரியும் பெண் சுகாதார ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.