பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

மகனை பிரிந்த ஆத்திரத்தில் 25 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய தாய் (வீடியோ இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‘
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்த பரா மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி தலீபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது எழுந்த பயங்கர சத்தத்தை அடுத்து ரெசா குல் என்ற பெண்மணி தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ளார்.
இதன்பின் அவர் கிராம பகுதியில் அமைந்த சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு சென்று தனது மகனை தேடியுள்ளார்.
அங்கு தனது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியாகி கிடப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து தீவிரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.
இவருடன் சேர்ந்து இவரது கணவர், மகள், இளைய மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து குல் உடைய மகள் பாத்திமா கூறுகையில், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு குடும்ப போரை நாங்கள் நடத்தியுள்ளோம் என்றும் துப்பாக்கியின் கடைசி குண்டு தீரும் வரை நாங்கள் போரிட்டோம் எனவும் கூறியுள்ளார்.