பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

நான் வெளியேறியதால் ஜனாதிபதிக்கு நெருக்கடி பொதுவேட்பாளர் சிறிசேன தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறி 48 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெரும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறி
சேன.

இவ்வாறான சூழ் நிலையில் நாங்கள் பெரும் தடைகளை எதிர் கொள்ளவேண்டும்.

எனினும் நான் எவர் மீதும் சேற்றை வாரிவீசாத பிரசாரத்தையே முன்னெடுப்பேன். ஜனவரி 8 ஆம் திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றமை மகிழ்ச்சி தருகிறது.

காரணம், அன்றையதினம்தான் பண்டாரநாயக்கவின் பிறந்ததினம். அவரது கட்சிக்கு புத்துயிர் கிடைக்கும் தினமாக அன்றைய தினம் அமையவிருப்பதால், பண்டார நாயக்கவின் ஆசை நிறைவேறும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொது எதிரணியின் பின்னாலோ பொது வேட்பாளராகிய எனக்குப் பின்னாலோ, எந்தவிதமான வெளிநாட்டு சக்திகளும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகின்றேன்.

நாட்டு மக்களின் நலனுக்காகவே நாங்கள் இணைந்திருக்கின்றோம்.

இதனைக் குழப்புவதற்காக எம் மீது தேவையில்லாமல் பழி போடுகிறார்கள் என அவர் மேலும் கூறினார்