பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

யாழ்ப்பாணத்தில் 70 பேருக்கு எயிட்ஸ் .இந்தவருடம் புதிதாக 13 பேருக்கு எயிட்ஸ் உள்ளது கண்டுபிடிப்பு 
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 13 போ் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கானவா்களில் 3 போ் குழந்தைகள் எனவும் மற்றையவா்களில் பெரும்பாலோனோர் இளவயதுப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது யாழ் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான எயிஸ்ட் நோய் தொற்றுக்குள்ளானவா்கள் உலாவி வருவதாகவும் அவா்களுக்கே தெரியாது அவா்களிடம் எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதுவரை 70 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயாளா்களாக அடையாளப் படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.