பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2014

இராணுவத்தினரோடு 90 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: 2 பேர் பலி! மூவர் காயம்
முச்சக்கவண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால், அதில் பயணம் செய்த இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன்,
மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை நவிமான கலாச்சார மண்டப நிர்மாண பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இராணுவத்தின் நான்காம் பொறியியல் படையணியைச் சேர்ந்த நான்கு இராணுவ சிப்பாய்கள் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
மலையொன்றிலிருந்து 90 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் இரண்டு படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 48 மற்றும் 33 வயதுடைய இரு இராணுவ வீரர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சுகவீனமுற்ற படைவீரர் ஒருவரை மாத்தறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, விபத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு இராணு பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.