பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2014

சாமியார் ராம்பால் ஆச்சிரமத்தில்கர்ப்பத்தை கண்டறியும் கருவி.கருத்தடை சாதனங்கள்  ஆயுத குவியல், பாதாள சுரங்கம்

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சத்லோக் ஆச்சிரமத்தை நடத்தி வருபவர், சாமியார் ராம்பால் (வயது 63). 

கடந்த 2006 ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு கொலை வழக்கில், அவர்  நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதில் அவரை கைது செய்ய கடந்த 18ஆம் திகதி பொலிஸார் சென்றபோது அவர்களுக்கும், சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில், 6 பேர் பலியானார்கள். 200இற்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர். பின்னர், மறுநாள் சாமியார் கைது செய்யப்பட்டார்.

அவர் 20ஆம் திகதி நீதிம ன்றில்; ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன்பேரில், அவரை 5 நாடடகள்; பொலிஸ் காவலில் எடுத்தனர்.கடந்த 4 நாட்களாக சாமியாரின் ஆச்சிரமத்தை சோதனையிட்டு வருகிறார்கள்.

12 ஏக்கரில் ஆச்சிரமம் அமைந்திருப்பதால், அதை மூன்று மண்டலங்களாக பிரித்து சோதனையிட்டு வருகிறார்கள். பாதாள அறைகளிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனையில் சாமியார் ராம்பால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருப்பது தெரிந்தது. அவரது படுக்கை அறையில் கர்ப்பத்தை கண்டறியும் கருவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே அவர் பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து இருப்பார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சோதனையில் ஆச்சிரமத்தில் நிறைய லொக்கர்கள் உள்ளன. அவற்றில், கைத்துப்பாக் கிகள், ஏர்கன்கள், இரட்டைக் குழல் துப் பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

குண்டு துளைக்காத வாகனம், ஒரு எண்ணெய் டாங்கர் லொறி, 2 டிராக்டர்கள், ஏராளமான இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இச ;சோதனை, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்.  இதற்கிடையே ஆச்சிரமத்தின் ஒரு பகுதியில் ஆயுத குவியல்கள் இரு ப்பதை பொலிஸார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு அறைக்குள் 26 பல்வேறு வகை துப்பாக்கிகள் இருந்தன.

ஏராளமான துப்பாக்கி குண்டுகளும் இருந்தன. இவ்வளவு துப்பாக்கிகளை சாமியார் ஏன் வாங்கி வைத்திருந்தார் என்று விசாரணை நடந்து வருகிறது.

இதற்காக பொலிஸார், சாமியார் ராம்பாலை ஆச்சிரமத்துக்கு அழை த்து சென்று வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை ஆச்சிரமத்தின் மற்றொரு பகுதியில் சுமார் 10 ஆயிரம் லத்தி கம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மற்றொரு அறையில் ஏராளமான புல்லட் -புரூப் உடைகள் இருந்தன. சில லொக்கர் பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன.

சில லொக் கர் பெட்டிகளை பொலிஸார் உடை த்து திறந்தனர். அவற்றில் ஏராளமான ஆவணங்கள் இருந்தன. அவற்றை பொலிஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சுமார் 10 லொக்கர் பெட்டிகளை உடைக்க முடியவில்லை. அந்த பெட்டிகளில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

இதற்கிடையே ஆச்சிரமத்துக்குள் சாமியார் ராம்பால் இரகசிய சுரங்க அறைகள் அமைத்திருந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த சுரங்க அறைகளை கண்டுபிடிக்க பொலிஸார் நவீன கருவிகளுடன் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.