பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2014

ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள் ளார்.

கம்ஹா ஹொரகொல்லவில் அமைந்துள்ள அமரர்கள் எஸ்.டபிள் யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறி மாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திரிகாவும் சென்றிரு ந்தார்.

இதன் போது ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் மகன் மார் தொடர்பில் அம்பலப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத் திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் பின்னர் ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியிலிருந்து பிளவடைந்து சென்ற அரசியல்வாதிகள் பற்றிய கோவைகள் இருப்பதாகவும் பழிவாங்கப் போவதில்லை எனவும் அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும், ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் கோவைகள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷவினர் கொள்ளையிட்டு உள்ள தாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பணத்தை ஊழல் மோசடி செய்த ராஜபக்ஷக்கள் தற்போது மேற்குலக நாடுகளின் சூழ்ச்சித் திட்டம் பற்றி கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாகவும் அவ்வாறு சதித்திட்டம் தீட்டியி ருந்தால் அதனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துமாறு சந்திரிகா தெரிவித்துள்ளார்.

வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்தாது ஆதாரங்களுடன் சமர்ப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்