பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

டேவிஸ் கிண்ணத்தை வென்ற சுவிட்சர்லாந்து அணி 
டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 
 
பிரான்சில் உள்ள லில்லி நகரில், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் அணிகள் மோதியதில்,சுவிஸ் அணி 6-4 6-2 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று டேவிஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
 
இந்த கிண்ணத்தை வாங்கி ரோஜர் பெடரர் வெற்றி சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார். சந்தோஷத்தில் அவர் கூறியதாவது, இந்த கிண்ணத்தை என்னுடைய அணி உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
 
இந்த வெற்றி எனக்கானது அல்ல, இது நம் நாட்டின் உள்ள ஒவ்வொருவருக்காகவும் என்றும் இது முக்கியமான தருணங்களில் ஒன்று என ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.