பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2014

மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை தியாகராயநகரில் நடைபெற உள்ள மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகர காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இது தொடர்பாக, மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ராமசுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தியாகராயநகரில் வியாழக்கிழமை நடைபெறும் மதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 
மதிமுக சார்பில் தியாகராயநகரில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேச வாய்ப்புள்ளதாகவும், அதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி பொதுக்கூட்டத்திற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்தது.