பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.


சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன். பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கும் நாட்டுக்கும் உழைப்பதற்காக அரசியலுக்கு வர வேண்டும்.
திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன். நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான்.
தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். காங்கிரஸை ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர். இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்தார்.