பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2014

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது 

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர், மேகாலய மாநில சிறையை உடைத்து தப்பியோடினர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் தேடி பிடிக்கும் முயற்சியில் மேகாலய காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் தொழிலாளர்களாக பனியாற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேகாலய மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.