பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2014



புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி
ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, லாலிகா லீக் காற்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஸ்பெயினின் லா லிகா லீக் காற்பந்து போட்டியில் பார்சி லோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் செவில் அணியைத் தோற் கடித்தது.

இந்தப் போட்டியில் பார்சி லோனா வீரர் மெஸ்ஸி ஹட்ரிக் கோல் அடித்தார். இதன் மூலம் லா லிகா வரலாற்றில் அதிக கோலடித்தவர் (253 கோல்கள்) என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் மெஸ்ஸி.

தனது 289ஆவது ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக ஸ்பெயினின் டெல்மோ சாரா 251 கோல்களை (278 ஆட்டம்) அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.