பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2014

பிரதமர் ராஜினாமா! புதிய பிரதமர் கோத்தா?
பிரதமர் டீ.எம். ஜயரத்தினவை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உடனடியாக அவரை தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
தொலைபேசி வழியாக பிரதமர் டீ.எம். ஜயரத்தினவை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த, அரசாங்கத்தின் தற்போதைய நெருக்கடியான நிலையில் செயற்திறன் மிக்க பிரதமர் ஒருவர் அவசியம் என்பதை கடும் வார்த்தைகளால் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே தான் பதவியிலிருந்து தூக்கி எறிய முன்னர் உடனடியாக பதவியை ராஜினாமாச் செய்து மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமர் டீ.எம். ஜயரத்தினவிடம் தெரிவித்துள்ளார்.
இதன் போது பிரதமர் டீ.எம். ஜயரத்தின மற்றும் ஜனாதிபதி மஹிந்தவுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்ய தற்போது டீ. எம். ஜயரத்தின இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும் அதற்காக இரண்டொரு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.
காலியாகப் போகும் பிரதமர் பதவிக்கு பெரும்பாலும் கோத்தபாய  ராஜபக்ஷ நியமிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.