பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2014

ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்படுமா சென்னை சுப்பர் கிங்ஸ்? 
சூதாட்ட புகாரில் உரிமையாளர்கள் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல் தொடரில் இருந்து
நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.

ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் (சிஎஸ்கே-வின் நிர்வாக தலைவராக இருந்தார்) மற்றும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. முட்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும் இவ்விருவர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி "உரிமையாளர்களே சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவருவதால் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளை ஐ.பி.எல்-லில் இருந்து நீக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாக வேண்டும், சிவப்பு கம்பளத்தின் கீழே குற்றவாளிகள் ஒழிந்துகொண்டு தப்பிவிடக் கூடாது" இவ்வாறு லலித் மோடி தெரிவித்தார்.