பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

திஸ்ஸ அத்தநாயக்கவை நிறுத்த ஐ.தே.க முயற்சி
ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துடன் இணைந்துவிடக்கூடாது என்பதில் அந்தக்கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும்கட்சியினால் சுமார் 5 மில்லியன் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்க கட்சி மாறுவார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் சுகவீனம் காரணமாக திஸ்ஸ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் கட்சி மாறுவதில்லை என்று உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் முயற்சியின் பேரிலேயே திஸ்ஸ அத்தநாயக்க கட்சி மாறும் முடிவை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் தம்மை விட சஜித் பிரேமதாஸ, ரணிலின் செல்வாக்கை பெற்றிருப்பதே திஸ்ஸவுக்கு உள்ள பிரச்சினை என்று கூறப்படுகிறது