பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

யாரை ஆதரிப்பது? இன்று அவசரமாகக் கூடுகிறது கூட்டமைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும், அரச தரப்பு சார்பில் மஹிந்த ராஜபக்‌ஷவும் போட்டியிடவுள்ள நிலையில் இவர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடும்.
இதில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.