பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2014

அமைச்சர் மேர்வின் கட்சி தாவுகிறார்?: தற்போது பேச்சுவார்த்தையில்
அமைச்சர் மேர்வின் சில்வா ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு தனது கட்சி தாவல் குறித்து அவர் எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அண்மைக்காலமாக அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையே இந்த கட்சி தாவல் முயற்சிக்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.
பெரும்பாலும் அமைச்சர் மேர்வின் சில்வா, பிரதியமைச்சர் திகாம்பரம் உள்ளிட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.