பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2014

ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோற்றால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முயற்சி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம்
என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளர் நியமிக்கப்பட்டமைக்கான காரணம் ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவேயாகும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜீவ விஜேசிங்க, ஹர்ஸ டி சில்வா ஆகியோருடன் சுரேன் சுரேந்திரனும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.
தேர்தலில் ஜனாதிபதி தோல்வியைத் தழுவினால் அவரை சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்.
இதன் காரணமாகவே ஆட்சி மாற்றத்தை புலம்பெயர் புலி ஆதரவு சமூகம் விரும்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.