பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2014



ட்சி மாறுவதற்காக, யாழ். எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 5கோடி ரூபா! அவர் நிராகரித்தார்!- ஜேவிபி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கட்சி மாறுவதை தடுப்பதற்காக கொடுக்கப்படவுள்ள பணம் எங்கிருந்து வந்தது என்று வெளிப்படுத்த வேண்டும் என்று ஜே வி பி கோரியுள்ளது.
ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களின் மனங்களை மாற்ற பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்க உறுதியளிக்கப்பட்டது.
எனினும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தநிலையில் இந்தளவு தொகைப்பணம் எங்கிருந்து வந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்று ஹேரத் கோரியுள்ளார்.
தமது அரசாங்கத்தில் உள்ளவர்களின் கோவைகள் தம்மிடம் இருப்பதாக பயமுறுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவ்வாறானவர்களை பாதுகாக்கும் ஒருவராக இருப்பதையிட்டு வெட்கப்படவேண்டும் என்று ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த கோவைகளை மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்தவேண்டும் என்று ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.