பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2014

அரசாங்கத்தில் பதவிகளுக்கான போட்டி உக்கிரம்
அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது தொடர்பில் பாரதூரமான மோதல் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர்கள் சிலர் விலகியதால் ஏற்பட்ட பதவி வெற்றிடங்கள் மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கான பதவிகளை பெறுவதில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல்களின் எதிரெலியாக ரூபாவாஹினி தொலைக்காட்சியில் இன்று காலை 7 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்த ஆயுபோவன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இறுதி நேரத்தில் நிராகரித்துள்ளார்.
புதிய பதவிகளுக்கு அமைச்சர்கள் எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா, டி.எம். ஜயரத்ன, விமல் வீரவன்ஸ ஆகியோர் இடையில் பெரும் கருத்து மோதல்கள் உருவாகியுள்ளன.
இந்த நிலைமையில், அமைச்சர் விமல் வீரவன்ஸ, எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரை இலக்கு வைத்து சொல் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்து அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோர் அமைச்சரவையின் ஐக்கியத்தை பாதுகாக்க பெரும் சிரத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.