பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2014

என்னுடன் மோதும் வீரரை விரைவில் அறிவியுங்கள் ஜனாதிபதி ஆதங்கம்
நான் நிழல் வீரருடன் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். என்னுடன் மோதலில் ஈடுபடவுள்ள வீரரை இனியாவது அறிவியுங்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற பால் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் அந்த நபர் யார் என்பதை நான் மிக விரைவில் காண விரும்புகின்றேன்.

ஒவ்வொரு நாளும் நாட்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வரும் எதிர்க் கட்சிகள் இன்றைக்குப் பிறகாவது என்னுடன் போட்டியிட வருபவர் யார் என்பதை அறிவியுங்கள்.

வெளிநாடுகளின் ஊடாக சிலர் இலங்கையில் அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

மக்களின் உரிமைகளை வேறு எவருக்கும் வழங்க தயாரில்லை. ஐக்கியமாக கட்சிக்குள் தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கு நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியாது.

மக்களும் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்து நாட் டின் ஜனநாயகத்தை பாதுகாத்த இன்றைய அரசாங்கம் என்றும் நாட்டு மக்களின் நம்பி க்கையை வென்றெடுத்துள்ளது என தெரிவி த்துள்ளார்