பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2014

அம்மாவை சந்தித்த அழகிரி: எஸ்கேப்பான அப்பா
0 ]
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற அழகிரி, அங்கு அம்மாவை சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.

அழகிரி வரும் தகவல் முன்னதாகவே தெரிந்ததும், அவரை சந்திக்க விரும்பாத கருணாநிதி, அவசரமாக புறப்பட்டு, சி.ஐ.டி., காலனி வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
தயாளுவிடம், உடல் நலம் விசாரித்ததோடு, கட்சி நிலவரங்கள் குறித்தும் பேசிய அழகிரி, வெகுநேரம் கோபாலபுரம் இல்லத்தில் இருந்த பின், போயஸ் கார்டனில் உள்ள தன் மகன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
தயாளுவை, அழகிரி சந்தித்துப் பேசிவிட்டதால், அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என, மதுரையில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.