பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2014

திருவண்ணாமலை - 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - இரண்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை

திருவண்ணாமலை பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை, இரண்டு இளைஞர்கள் ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், திருவண்ணாமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இரண்டு இளைஞர்களும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என கூறப்படுகிறது.