பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2014

ரொனால்டோவுக்கு 10 அடி உயரத்தில் வெண்கல சிலை

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த பிரபல காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்ரியானோ ரொனோல்டோவுக்கு அந்நாட்டில் 10 அடி உயரத்தில் வெண்கல சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. 
 
போர்த்துக்கலின் மடெய்ரா நகரில் ரொனால்டோவின் ரசிகர்களால் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. போட்டிகளின் போது ரொனோல்டோ கோல் அடிப்பதற்கு தயாராகும் போது எவ்வாறு ஆயத்தமாக நிற்பாரே அந்த நிலையை பிரதி பலிக்கும் விதத்தில் இந்த சிலை வடிவமைக் கப்பட்டுள்ளது. 
 
குறித்த சிலை குறித்து ரொனால்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கடந்த ஆண்டு சிறந்த கால் பந்தாட்ட வீரருக்கான பலேன் டி ஆர் விருதை ரொனால்டோ வென்றிருந்ததற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த சிலை நிர்மாணிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.