பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2014

நாடாளுமன்றத்தில் 12ம் திகதி கட்சி தாவல்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் நாடாளுமன்றத்தின் இறுதிக்கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
இதன் போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த சிலர் கட்சி தாவ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை மறுதினம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மூன்று நாட்களில் நாடாளுமன்றம் கூடுவதால் சபையில் பெரும் அமளி நிலைமை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி தாவ தீர்மானித்துள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.