பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2014

கூட்டமைப்பின் நிலைப்பாடு 27ஆம் திகதி அறிவிப்பு 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த வாரம் நாடு திரும்பிய பின்னர்,  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது முடிவு எடுக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் எமது கட்சியின ருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். எனினும், இரா.சம்பந்தன் நாடு திரும்பிய பின்னரே எமது முடிவு வெளியிடப்படும்.

அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் தங்கியுள்ளார் என்று மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.